கோவை வெள்ளலூரில் கிடந்த ஆண் சடலம்: பச்சைக் குத்திய புகைப்படங்கள் வெளியீடு!
கோவை வெள்ளலூரில் கிடந்த ஆண் சடலத்தின் உடலில் பச்சைக் குத்திய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கோவை வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவரைப் பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
நேற்று கோவை மாநகர் வெள்ளலூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்தில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அந்த சடலம் கண்டெடுக்கப்படும் போது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் கொலையா என்ற கோணத்தில் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இறந்தவரின் அடையாளம் தெரியாத நிலையில் அந்த நபரின் வலது புற மார்பிலும் இடது கையிலும் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
வலதுபுற மார்பில் அபர்ணா (Abarna) என்று ஆங்கிலத்திலும் இடது கையில் XI. XI.MMVI என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள காவல்துறையினர் அந்த நபர் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் அல்லது நேரில் வருமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.