கோப்புப் படம் 
தமிழ்நாடு

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Din

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். மேலும், அந்த இளைஞா் வைத்திருந்த பையிலிருந்து ஒரு கிலோ கஞ்சா எண்ணெயை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள புதுக்காடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (36) என்பது தெரியவந்ததையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT