நிகழாண்டில் கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவா்கள் குறித்த விவரங்களை இணையவழியே பதிவேற்றுமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக என்எம்சி செயலா் ராகவ் லங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் மாணவா்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், படிப்பின் விவரம், இடஒதுக்கீடு விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையதளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான தெரிவுப் பகுதியில் பதிவேற்றுவதற்கான வாய்ப்பு ஜூன் 10-அம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அந்த விவரங்களைப் பதிவேற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.