முகப்பு
தமிழ்நாடு

மன உளைச்சலில் அன்புமணி! 2026 தேர்தல் வெற்றியில் பாமக?

பாமக நிறுவனர் ராமதாஸின் வழியில் செல்லவிருப்பதாக அன்புமணி பேச்சு

Updated On : 24 மே 2025, 6:26 pm IST
கட்சிக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் - FB | Anbumani Ramadoss
பகிர்:

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கும், அக்கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் அண்மையில் கருத்து மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில், நிறுவனர் ராமதாஸின் வழியில் செல்லவிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் பாமக கட்சிக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, ``என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இன்றுவரையில் மருத்துவர் ராமதாஸ் சொல்வதைத்தான் கேட்டு வந்தேன். இனியும் ஒரு மகனாகவும், கட்சித் தலைவராகவும் அவர் சொல்வதைத்தான் கேட்பேன்.

Advertisement

Advertisement

அவரின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து செயல்படுவேன். அதைத்தவிர வேறு என்ன இருக்கிறது. எங்கள் குடும்பப் பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதில் மற்றவர்களின் தலையீடு தேவையில்லை.

கேரளத்தில் தனிப்பெரும் சமுதாயமான ஈழவர் சமுதாயத்துக்கு 14 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்துக்கு எதுவும் இல்லை.

தமிழக காவல்துறையில் 109 உயர் அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். இதுதான் சமூக நீதியா? 10 சதவிகிதம், 12 சதவிகிதம் வந்துவிட்டதாக அரசு பொய் கூறிவருகிறது. 20 சதவிகிதத்தில் ஒரு சதவிகிதம் மட்டுமே நமக்கு கிடைக்கிறது.

தமிழகத்தில் பாமக ஆட்சி வெகுதொலைவில் இல்லை. ஆட்சியை எப்படி பிடிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.