சென்னை: தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் இன்று(மே 27) பலத்த மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை (மே 27) உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்தப் புயல் சின்னம் நகரும் திசையின் அடிப்படையில் தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 27-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.