திருச்செந்தூர் முருகன் கோயில் 
தமிழ்நாடு

தூத்துக்குடிக்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக வரும் மே 31ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.

பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையாகிறது.

மீண்டும் மீண்டுமா? ரூ.500 கள்ளநோட்டுப் புழக்கம் 37% அதிகரிப்பு: ஆர்பிஐ கவலை

அதன்பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

பின்னா், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT