முகப்பு
தமிழ்நாடு

குறைந்த காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

குறைந்த காற்றழுத்தம் நிலவுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 நவம்பர் 2025, 10:11 am IST
கடலுக்குச் செல்ல தடை
பகிர்:

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் பல்வேறு கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தூத்துக்குடி, நாகை, காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

மீனவர்களின் பாதுகாப்புக் கருதி, கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தூத்துக்குடியிலிருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 272 விசைப் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தடையால் காரைக்கால் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மீனவர்கள் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

நாகையில் 2வது நாளாக கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குத் தொடரும் தடையால் மீன்பிடித் தொழிலாளர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments