சென்னை: சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.14 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்துக்குள் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்துவைத்து, பேருந்து நிலையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்துள்ளார்.
அம்பத்தூர், ஆவடி மற்றும் மாதவரம், வில்லிவாக்கம், தாம்பரம் என பல ஊர்களுக்கும் அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொழிற்சாலைப் பகுதி என்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையமாகவும் இது அமைந்துள்ளது.
இங்கு, ஓட்டுநர், நடத்துநருக்கு ஓய்வு அறைகள் உள்பட பல்வேறு வசதிகளுடன் ரூ. 14 கோடியில் கட்டப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம், பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்திலிருந்து பேருந்துகளில் பயணிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கிழ் சிஎம்டிஏ சார்பில் நவீன வசதிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாதவரத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் செல்லும் விரைவுப் பேருந்துகளும் தற்போது அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படுவதால், இந்த புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது குறித்து மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்கும் உணவகங்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறப்பு அறைகளும் இங்கு அமைக்ப்பட்டுள்ளதை பயணிகள் அதிகம் வரவேற்றுள்ளனர்.
தற்போது, ஆவடியில் சுமார் ரூ. 32 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் உருவாக்கப்படுகிறது. சென்னை மாநகரத்தில் மட்டும் 11 பேருந்து நிலையங்கள் சுமார் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. கனமழை! எந்தெந்த மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.