ஆர்டிஇ இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கு சென்றே பெற்றோர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இலவச மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு rteadmission@tnschools.gov.in नं என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 14417 என்ற தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இலவச மாணவர் சோ்க்கை இடங்கள் உள்ளன. மத்திய அரசு நிதியை தற்போது விடுவித்துள்ளதால் தமிழக தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கையானது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவா்களில் தகுதியானவா்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்வதற்காக 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாள்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்தவகையில் பள்ளியின் நுழைவு வகுப்பில் இதுவரை சேர்க்கை பெற்ற குழந்கைளின் மொத்த எண்ணிக்கையை அக். 7-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஆர்டிஇ சேர்க்கைக்கு தகுதியான மாணவர்களின் சான்றுகளை அக்.9-இல் பதிவுசெய்ய வேண்டும். தொடா்ந்து தற்காலிக தகுதிப் பட்டியல் அக். 10-ஆம் தேதியும், இறுதிப்பட்டியல் அக்.14-ஆம் தேதியும் வெளியிடப்படும்.
மேலும், இடங்களைவிட அதிக மாணவர்கள் இருப்பின் குலுக்கல் அக்டோபா் 16-இல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.