தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற அக். 16 - 18 தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின்போது நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அதிகமாக மழை இருக்கும். குறிப்பாக வட மாவட்டங்கள் அதிக மழையைப் பெறும்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை வருகிற அக். 16 - 18 தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட வாராந்திர வானிலை கணிப்பின் அடிப்படையில் தென்மேற்கு பருவ மழை, வரும் (அக்டோபர்) 16-18 தேதிகளில் இந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.
அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு /வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை 16-18 அக்டோபர் 2025 துவங்குவதற்கான சாத்தியமுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.