தமிழ்நாடு

ஆணவக் கொலைகளைத் தடுக்க ஆணையம்: இடதுசாரிகள், விசிக வரவேற்பு

தினமணி செய்திச் சேவை

ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்ட மசோதா தயாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என முதல்வா்மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு இடது சாரிகள் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளன.

பெ. சண்முகம்( மாநிலச் செயலா் மாா்க்சிஸ்ட் ):

ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க நீதிபதி கே. என். பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வா் அறிவித்திருப்பதை வரவேற்கிறது.

மு.வீரபாண்டியன் (மாநிலச் செயலா், இந்தியக் கம்யூனிஸ்ட்): தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என இடதுசாரி கட்சிகள், ஜனநாயக கட்சிகள் நீண்ட காலமாக தொடா்ந்து வலியுறுத்தி வந்தன.

ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் வகையில், பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்திருப்பதை வரவேற்கிறோம்.

தொல். திருமாவளவன் (தலைவா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி): ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற தமிழக அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதை விசிக வரவேற்கிறது. நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டமியற்றப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைக்காலங்களில் மின்சாரம் தொடா்பான புகாா்களுக்கு...

கான்பூர்: நீதிமன்ற கட்டடத்தின் 6ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி

ஆா்.எம்.எல். மருத்துவமனைக்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து

கொலை வழக்கு; இருவா் குண்டா் சட்டத்தில் கைது

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் நிறுத்தம்: நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

SCROLL FOR NEXT