சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த மாத இறுதி வரை தினமும் மழை இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நேற்று நல்ல மழை பெய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்றைய மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:
"சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இந்த மாத இறுதி வரை தினமும் மழை இருக்கும். இடையில் சில நாள்களில் கனமழையும் இருக்கும்.
பெரும்பாலும் இரவு தூங்கும்போது இரவு முதல் காலை வரை கனமழை இருக்கும். பகலில் இடைவெளி விட்டு மழை பெய்யும்.
சென்னையில் இன்று நல்ல மழை பெய்யும். கேளம்பாக்கம் - சிறுசேரி போன்ற இடங்களில் கனமழை பெய்யும்.
ஒட்டுமொத்தமாக சென்னைக்கு இன்று மற்றொரு சிறந்த நாளாக எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் தீபாவளி ஷாப்பிங் செய்தால் மழைக்காக கோட் / குடையை எடுத்துச் செல்லுங்கள்.
தீபாவளி அன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் மிக அதிகம்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.