ரயில் கோப்புப் படம்
தமிழ்நாடு

மைசூரிலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து!

மைசூரிலிருந்து திருநெல்வேலி, ராமநாதபுரம், காரைக்குடி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்கள்

தினமணி செய்திச் சேவை

கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து திருநெல்வேலி, ராமநாதபுரம், காரைக்குடி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை (அக்.27) முதல் ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு: மைசூரு - திருநெல்வேலி இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06239/06240) திங்கள்கிழமை (அக்.27) முதல் நவ.25 வரை ரத்து செய்யப்படவுள்ளது.

அதேபோல், மைசூரு - ராமநாதபுரம் இடையே இயங்கும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06237/06238) அக்.27,28 தேதிகளில் ரத்து செய்யப்படும். மேலும், மைசூரு - காரைக்குடி இடையே வாரம் இருமுறை இயங்கும் சிறப்பு ரயில் (எண்:06243/ 06244) வருகிற அக்.30 முதல் நவ.30 வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT