முகூா்த்த தினத்தையொட்டி, சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை (ஆக.4) பத்திரப் பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வியாழக்கிழமை (செப்.4) சுபமுகூா்த்த தினமாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதலாக ஆவணங்கள் பதிவு செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 டோக்கன்களும், 2 பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும்.
அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 டோக்கன்களும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தத்கால் டோக்கன்களுடன் கூடுதலாக 4 வழங்கப்படும் என்று பதிவுத் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.