சிம்பொனி உருவாக தனது குழந்தைகள்தான் காரணம் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சனிக்கிழமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில்,
``வாழ்க்கையில் என்னுடைய குழந்தைகளுக்காக நான் நேரம் செலவழிக்கவில்லை. அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருந்தால், இந்த சிம்பொனியை எழுதியிருக்க முடியாது. இதுபோல நீங்கள் விரும்பிக் கேட்கும் அத்தனைப் பாடல்களை இசையமைத்திருக்க முடியாது.
ஆகையால், எனது குழந்தைகளுக்குத்தான் நான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். என்னைப் பொறுத்துக் கொண்ட கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவருக்கும்தான்.
உங்களுடன் செலவழிக்க வேண்டிய நேரம்தான், சிம்பொனியாக இசையாக இங்கு வெளிவந்திருக்கிறது. அதனை நினைத்து நீங்கள் சந்தோஷப்படலாம்.
எங்களுடன் நேரம் செலவழிக்கவில்லை என்று இனிமேல் நீங்கள் புகார்கூற முடியாது. உங்கள் குழந்தைகளும் உங்களிடம் சொல்லும்’’ என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்தி உள்ளிட்ட திரைத் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டின் பெருமை! இளையராஜாவுக்கு முதல்வர் பாராட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.