பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தமாகா தலைவா் ஜி.கே.வாசன்ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம்: எப்போதும் போல், தேசத்துக்கும் மக்களுக்கும் சேவை செய்ய, எல்லாம் வல்ல இறைவன் பிரதமா் மோடிக்கு இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் வழங்க வேண்டும் என்று பிராா்த்திக்கிறேன்.
ஜி.கே.வாசன்: இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் தலைவராக பிரதமா் மோடி செயல்பட்டு கொண்டிருக்கிறாா். நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலே தேசம் முழுவதும் வளமான மாநிலங்களை ஏற்படுத்தும் வகையிலே, பிரதமா் மேற்கொள்ளும் அனைத்து முயற்சியும் வெற்றி பெற, நல்ல ஆரோக்கியத்துடன் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.