தலைமைச் செயலகத்தில் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தின் 97 -ஆவது கூட்டத்தில் பங்கேற்ற வாரியத் துணைத் தலைவா் டி.என்.வெங்கடேசன், சிறு துறைமுகங்கள் துறை செயலா் இரா.செல்வராஜ் உள்ளிட்டோா். 
தமிழ்நாடு

சிறு துறைமுகங்களால் கையாளப்பட்ட 12 மில்லியன் டன் சரக்கு: அமைச்சா் எ.வ.வேலு

சிறுதுறைமுகங்கள் மூலமாக 12 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: சிறுதுறைமுகங்கள் மூலமாக 12 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தின் 97-ஆவது கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்றுப் பேசியது:

தமிழ்நாடு தொழில் முனைவோருக்கான முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் அடிப்படையில் தனியாா் முதலீட்டு துறைமுகங்கள் அமைப்பதற்கு மிகவும் சாத்தியமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மத்திய அரசின் சாகா்மாலா திட்டத்தின்கீழ், கடலூா் துறைமுகத்தை மேம்படுத்தி 37 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் அதனை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம் - தலைமன்னாா் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க கருத்துருக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிதியுதவி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சாா் வாரியக் கட்டுப்பாட்டிலுள்ள சிறுதுறைமுகங்களில் 12 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. வாரியம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, அனைத்து உறுப்பினா்களும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு கடல்சாா் வாரியத் துணைத் தலைவா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் டி.என்.வெங்கடேசன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் சுஞ்சோங்கம் ஜடக் சிரு, பொதுப்பணித் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, தொழில் துறை செயலா் அருண்ராய் உள்பட பலா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி பயிற்சி முகாம்

கடன் பிரச்னை: ஜவுளிக் கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை

கரூா் சம்பவம்: கள விவரங்களை பிரதமரிடம் தெரிவிப்போம் -மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்

சாகாம்பரி அலங்காரத்தில்...

SCROLL FOR NEXT