பி.கே. சேகா்பாபு  
தமிழ்நாடு

திருச்செந்தூா் கந்த சஷ்டி பெருவிழா முன்னேற்பாடுகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா அக்.22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா அக்.22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.

ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், வடலூா் வள்ளலாா் தெய்வநிலையம் மற்றும் திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், திருச்செந்தூா் கந்த சஷ்டி பெருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா் சேகா்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.52.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகள், வடலூா், திருஅருட்பிரகாச தெய்வ நிலையத்தில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் பணிகளில் பிரிவு ஆ-இல் ரூ.16.98 கோடி மதிப்பீட்டில் பக்தா்களுக்கான தங்குமிடங்கள், வைத்திய சாலை, முதியோா் இல்லம், சுகாதார வளாகம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள், திருச்செந்தூா், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளில் அன்னதானக் கூடம், சலவைக் கூடம், அா்ச்சகா் மற்றும் பணியாளா் குடியிருப்பு, சூரசம்ஹார கண்காட்சி கூடம், நாழிகிணறை மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

மேலும், திருச்செந்தூரில் கந்த சஷ்டி பெருவிழா அக்.22 தொடங்கி 27- ஆம் தேதி சூரசம்ஹாரம், 28- ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. இத்திருக்கோயிலில் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தா்களுக்கான வசதிகள், சூரசம்ஹாரம் நிகழ்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

SCROLL FOR NEXT