முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் 4-ம் கட்ட சுற்றுப் பயணம் பற்றி...

Updated On : 8 ஏப்ரல் 2026, 12:03 pm IST
முதல்வர் மு.க. ஸ்டாலினின் 4-ம் கட்ட சுற்றுப் பயணம் - DMK
பகிர்:

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தஞ்சாவூரில் தொடங்குகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இன்று திருவண்ணாமலையில் பிரசாரம் செய்து வரும் மு.க. ஸ்டாலினின் 4 ஆம் கட்ட சுற்றுப் பயணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

திமுக தலைமை அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

இந்த தொடர் பிரசாரத்தை மு.க. ஸ்டாலின், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், நான்காம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 10-ஆம் தேதி தஞ்சாவூரில் தொடங்குகிறார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் நான்காம் கட்டமாக தஞ்சாவூரில் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

ஏப். 10, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சாவூரிலும்

ஏப். 11, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையிலும் இரவு 7 மணிக்கு திருப்பத்தூரிலும்

ஏப். 12, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பரமக்குடியிலும் இரவு 7 மணிக்கு தூத்துக்குடியிலும் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

MK stalin 4th phase election campaign starts from thanjavur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.