முகப்பு
தமிழ்நாடு

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை குறித்து..

Updated On : 13 ஏப்ரல் 2026, 5:39 pm IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ANI
பகிர்:

தேர்தல் பிரசாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஏப். 19 ஆம் தேதி சென்னை வரவுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் ஏப். 19 ஆம் தேதி மயிலாப்பூர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

தேர்தல் பிரசாரத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப். 18 ஆம் தேதி கோவை வரவுள்ள நிலையில், மறுநாள் மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார்.

Advertisement

Advertisement

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப். 15- ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.

வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி எம்ஜிஆர் சிலை வரை ஏப். 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி சாலை வலம் மேற்கொள்கிறார்.

தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

summary

Union Home Minister Amit Shah is scheduled to visit Chennai on April 19 for election campaigning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments