முகப்பு
தமிழ்நாடு

தீ பரவட்டும், நாடாளுமன்றம் வரையில்... முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி

Updated On : 18 ஏப்ரல், 2026 at 1:23 PM
முதல்வர் ஸ்டாலின் - விடியோ க்ளிப்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 1:12 PM

தொகுதி மறுவரையறை என்ற கறுப்புச் சட்டத்துக்கு எதிரான நமது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆபத்தை ஓராண்டுக்கு முன்னரே கண்டறிந்து, இந்த வெற்றியைப் பெறுவதற்கான எல்லா படிகளையும் அப்போதே நாம் தொடங்கினோம்.

மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் தொடங்கி, நேற்று முன்தினம் கறுப்புக் கொடி ஏற்றி, கறுப்புச் சட்ட நகலை கொளுத்தினேன். அதுவே, திண்டுக்கலில் நேற்று வெற்றிக்கான வெடியைக் கொளுத்தினேன்.

தீ பரவட்டும் என்று சொன்னேன். அது நாடாளுமன்றம் வரையில் பற்றிக் கொண்டது. 50, 60-களில் பார்த்த பழைய திமுகவை பார்க்க வேண்டிவரும் என்று எச்சரித்தேன்.

Advertisement

அப்படியென்றால் என்ன? என்று கேட்ட சில அரைவேக்காடுகளுக்கு - இதுதான் திமுக என்று வலிமையாகக் காட்டியுள்ளோம்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் முழுக்க முழுக்க பாஜகவுக்கு சாதகமாகக் கொண்டுவரப்பட்ட கறுப்புச் சட்டத்தை, நாடாளுமன்றத்தில் தோற்கடித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

summary

Chief Minister M.K. Stalin expresses gratitude for the defeat of the Constituency Delimitation Bill.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.