முகப்பு
தமிழ்நாடு

பாஜகவின் விரோதி... அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின்!

சென்னையில் பிரசாரத்தின்போது அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின் பேசியது தொடர்பாக...

Updated On : 20 ஏப்ரல் 2026, 8:31 pm IST
அரவிந்த் கேஜரிவாலுடன் மு.க. ஸ்டாலின் - யூடியூப் / MK Stalin
பகிர்:

பாஜகவின் ஜென்ம விரோதி தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் என்றும், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாதவர் எனவும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 20) தெரிவித்தார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஏப். 20) பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின்போது அரவிந்த் கேஜரிவாலை வரவேற்று மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

Advertisement

Advertisement

தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தை இங்கு தொடங்கி வைத்தவர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால். அதனால், கேஜரிவாலுக்கும் நமக்குமான உறவு மிகவும் நெருக்கமானது.

பிரசாரத்துக்கு சென்னை வந்துள்ள கேஜ்ரிவாலை வரவேற்கிறேன். பாஜக தனது ஜென்ம விரோதியாக கேஜரிவாலை பார்க்கிறது. எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதவர். அதனால், மதவாதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்துவதற்கு எதிராக கேஜரிவால் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தமிழகத்திற்கும் பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிராகவே பிரசாரம் செய்ய வந்துள்ளார் என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

summary

TN Election 2026 The BJP's Adversary... M.K. Stalin on Arvind Kejriwal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.