90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!
மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் மமதா பானர்ஜிக்கு அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து...
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆர்) பெயரில் 90 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பாஜகவுக்கு மேற்கு வங்க மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம் மேற்கு வங்க தேர்தலில் மமதா பானர்ஜிக்கு தனது ஆதரவை கேஜரிவால் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மமதாவின்ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக தனித்துப் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில், மமதாவுக்கு கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த 23 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்த நிலையில், மே 29 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்று கடைசிநாள் என்பதால், அரசியல் கட்சித் தலைவர்கள் மும்முரமாக வாக்கு சேகரித்தனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. 2ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் மமதாவுக்கு ஆதரவு தெரிவித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
''தேர்தலையொட்டி முதல்வர் மமதா பானர்ஜிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சர்வாதிகாரத்திற்கு எதிராக சண்டையிடும் மேற்கு வங்க மக்களை பாராட்டுகிறேன்.
கடந்த இரு நாள்களாக மாநிலத்தில் உள்ள சூழலை நேரடியாகக் கண்டு வருகிறேன். 90 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பாஜகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்'' எனக் குறிப்பிட்டார்.
People of Bengal will take revenge for cutting 90 lakh votes Arvind Kejriwal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.