முகப்பு
இந்தியா

மமதாவுக்கு மேலும் பின்னடைவு! திரிணமூல் காங். மாநிலத் தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா ராஜிநாமா!

மேற்கு வங்க மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா ராஜிநாமா...

Updated On : 4 ஜூலை 2026, 2:58 pm IST
மமதா பானர்ஜி - சந்திரிமா பட்டாச்சார்யா... - கோப்புப் படம் | fb
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் பதவியை சந்திரிமா பட்டாச்சார்யா ராஜிநாமா செய்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்து வருகின்றன.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி பிரிவினர் அக்கட்சியின் முழு உரிமையையும் கோரி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியின் ஆதரவுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநிலத் தலைவராகப் பதவியேற்ற ஒரே மாதத்தில் சந்திரிமா பட்டாச்சார்யா இன்று (ஜூலை 4) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதுபற்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கட்சியில் வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் விரைவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, முன்னாள் முதல்வர் மமதா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றவரும் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரிமா பட்டாச்சார்யா, கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

மேலும், கடந்த ஜூன் மாதம் மூத்த தலைவர் சுப்ரதா பக்ஷிக்கு பதிலாக மாநிலத் தலைவர் பதவியில் சந்திரிமா பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Chandrima Bhattacharya has resigned as the West Bengal state president of the Trinamool Congress party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments