அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!
திருச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.
திருச்சியில் தமிழ்நாடு அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை காலை வாக்களித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை திருவெறும்பூர் தொகுதியில் மூன்றாவது முறையாக திமுக வேட்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், திருச்சி வரகனேரியில் உள்ள டி.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், தனது மனைவி ஜனனியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
Advertisement
Advertisement
summary