முகப்பு
தமிழ்நாடு

வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 85 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On : 24 ஏப்ரல் 2026, 11:28 am IST
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு - PTI
பகிர்:

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 85 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக வியாழக்கிழமையில் காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 85 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இருப்பினும், தென் மாவட்டங்களில் எங்குமே 85 சதவிகித வாக்குப்பதிவைத் தொடவில்லை.

Advertisement

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவிகிதமும், சிவகங்கையில் 76.66 சதவிகிதமும், ராமநாதபுரத்தில் 77.01 சதவிகிதமும், திருநெல்வேலியில் 77.94 சதவிகிதமும், மதுரையில் 80.52 சதவிகிதமும், தூத்துக்குடியில் 80.53 சதவிகிதமும், தேனியில் 81.55 சதவிகிதமும், தென்காசியில் 82.41 சதவிகிதமும், விருதுநகரில் 84.82 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தென் மாவட்டங்களில் குறைந்தபோதிலும், கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டிலேயே அதிகமாக கரூரில் 92.63 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சேலத்தில் 90.76 சதவிகிதமும், நாமக்கல்லில் 90.21 சதவிகிதமும், ஈரோட்டில் 90.10 சதவிகிதம் என 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவான மாவட்டங்கள் அனைத்தும் மேற்கு மண்டலமான கொங்கு பகுதிகளிலேயே உள்ளன.

summary

Vote Percentage: Lower in Southern Districts; Higher in the Kongu Region

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments