22.5.1976: தென் மாநிலங்களில் ஹிந்தியைப் பரப்ப புது திட்டம்
தென் மாநிலங்களில் ஹிந்தியைப் பரப்ப புது திட்டம்...
சென்னை, மே. 21- தென் மாநிலங்களிலும் மற்ற ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியைப் பெரும் அளவில் பரப்ப ஒரு புதுத் திட்டம் தயராகிறது.
இம்மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் இரண்டாவது அகில இந்திய ஆட்சி மொழி ( ஹிந்தி) மகாநாடு டில்லியில் நடந்தது. அதில் அரசாங்க அதிகாரிகளும், 16 ஹிந்திப் பிரசார சபைகளும் கலந்து கொண்டன. ஹிந்தி பரவ வேண்டுமானால். பிராந்தியமொழிகளின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற திட்டத்தை மகாநாடு ஏற்றுக் கொண்டது. இதற்கு வேண்டிய நிதிவசதி செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
இத்தகவலை தட்சிண - பாரத ஹிந்திப் பிரச்சார சபையின் பொதுக் காரியதரிசி வி. ஆஞ்ச நேய சர்மா இன்று நமது நிருபரிடம் கூறினார்.
Advertisement
Advertisement
இதற்கு அரசாங்க ரீதியாகவும், அரசாங்க சார்பு அற்ற ரீதியாகவும் அமைப்பை உருவாக்கும் பொறுப்பு டில்லியில் உள்ள ஆட்சி மொழி இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அது தற்போது புள்ளி விவரங்களைச் சேகரித்து வருகிறது.
பிராந்திய மொழிகளில் பாட புத்தகங்கள் வெளியிட மத்திய அரசாங்கம் மாநில அரசு ஒவ்வொன்றுக்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. இந்தத் திட்டம் நடைமுறையில் செயல்பட்டால், அவ்வப்போது ஒழுங்கான கால தவணைகளில் பிராந்தியமொழிகள் வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்து வரும்.
பள்ளிகளில் காலையிலோ, மாலையிலோ விருப்பப் பாடமாக, (பள்ளி நேரத்துக்கு அப்பால்), ஹிந்தியைக் கற்க விரும்பும் மாணவர்கள் எண்ணிக்கையை அறிய மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.
சென்னை நகரில் சுமார் 2000 மாணவர்களுக்கு ஹிந்தி போதிக்க 50 வகுப்புகள் நடைபெறுகின்றன. மாநிலம் முழுவதிலும் மேலும் 300 வகுப்புகள் ஆரம்பிக்க சபை திட்டமிட்டிருக்கிறது.
67 வாக்கில் திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தீவிரமாக ஹிந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தியதால் 500 மாணவர்கள் தான் சபையின் பரீட்சை எழுதினார்கள். ஆனால் 1975-76ல் இது 35,000 ஆக உயர்ந்திருக்கிறது. ...
அரசியலமைப்பு 42வது திருத்த மசோதா தாக்கல் - 9வது ஷெட்யூலில் 9 மத்ய, 55 மாநில சட்டங்கள் சேரும்
புது டில்லி, மே. 21- அரசியலமைப்பு (42-வது) திருத்த மசோதாவை இன்று லோக் சபையில் சட்ட மந்திரி கோகலே தாக்கல் செய்தார். அது புதன் கிழமையன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
(1) சில முக்ய மத்ய சட்டங்களை கோர்ட்டில் ஆட்சேபிக்க முடியாமல் வைப்பது (2) பெரும்பாலும் நிலச் சீர்திருத்தம் சம்பந்தமான பல மாநில சட்டங்களுக்கு அத்தகைய பாதுகாப்பளிக்க அவற்றை 9வது ஷெட்யூலில் சேர்ப்பது (3) கடற்கரையையொட்டிய கடல் பரப்பு வரம்பு, ஏக போக பொருளாதார மண்டலம், கடல் மண்டலம் ஆகியவற்றை அவ்வப்போது பார்லிமெண்ட் சட்டம் மூலம் நிர்ணயிப்பது ஆகியவை அந்த திருத்தத்தின் மூன்று நோக்கங்களாகும். ...
May 22, 1976: New Plan to Propagate Hindi in the Southern States
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.