தமிழ்நாடு தேர்தல்! 2021 கருத்துக் கணிப்பு அவ்வளவு துல்லியமாக இருந்ததா?
கடந்த 2021-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி முடிவுகள் இருந்ததா?
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கணிப்புகள் வெளியாகவிருக்கும் நிலையில், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் கணிப்புப்படிதான் முடிவுகள் அமைந்திருந்ததா? எந்த அளவுக்குத் துல்லியமாக இருந்தன என்பது குறித்து அலசப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி முடிந்து, மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவிருக்கும் நிலையில், இன்று வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கணிப்புகள் வெளியாகவிருக்கின்றன.
தமிழ்நாடு, புதுவை, கேரளம் உள்ளிட்ட 5 மாநில மக்களுமே ஏன் ஒட்டுமொத்த நாடுமே இன்று வெளியாகவிருக்கும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கணிப்புகளை அறிய ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. 84 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்று மேற்கு வங்கத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலையே வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கணிப்புகள் வெளியாகவிருக்கின்றன.
அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சித் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும் என்பது குறித்த கணிப்புகள் வெளியாகிவிடும்.
6.30 மணியளவில் வாக்குப்பதிவுகள் முடிவடையும். அதன்பிறகு வெளியாகும் தேர்தல் கணிப்புகள் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு எந்தவிதமான முடிவுகள் வெளியாகும் என்பது குறித்து அறிவிக்கப்படும் கணிப்பாகும்.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள்படித்தான் தேர்தல் முடிவுகள் அமையும் என்பது உறுதியல்ல, அப்படியே அல்லது சற்று வேறுபட்டு அல்லது முற்றிலும் மாறுபட்டும் வெளியாகலாம்.
உண்மையில், 2021 தேர்தல் கணிப்புகள்படித்தான் முடிவுகள் இருந்ததா?
தேர்தல் கணிப்புகளின் துல்லியத்தன்மை எப்போதும் விவாதத்துக்குரியதுதான் என்றாலும், அதன் மீதான எதிர்பார்ப்பு மட்டும் குறைவதேயில்லை.
2021 பேரவைத் தேர்தல் கணிப்புகள் திமுக தலைமையிலான கூட்டணி 160 இடங்களையும், அப்போதைய ஆளும் கட்சியும், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 75 இடங்களைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படியே, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியான போது திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. திமுக மட்டுமே ஆட்சியமைக்கத் தேவையான 133 தொகுதிகளை வென்று பெரும்பான்மை தொகுதிகளோடு 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.
அதிமுக தலைமையிலான கூட்டணியும் கணிப்புகள்படியே 75 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தது.
2021 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படித்தான் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன என்பதால், இன்றைய கணிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது.