வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!
தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று மாலை வெளியாவதைப் பற்றி...
தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று மாலை வெளியாவதை அறிய பொதுமக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் கடந்த ஏப். 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது.
அதேபோல, மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
அதன்படி, 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடந்தது முடிந்த நிலையில், இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 142 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் 85.05 சதவிகித வாக்குகளும், புதுச்சேரியில் 90 சதவிகித வாக்குகளும், மேற்கு வங்கத்தில் முதற்கட்டத்தில் 93.19 சதவிகித வாக்குகளும், கேரளத்தில் 78.27 சதவிகித வாக்குகளும், அஸ்ஸாமில் 85.56 சதவிகித வாக்குகளும் பதிவாகின. இதனால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேரளம் (140), அஸ்ஸாம் (126), புதுச்சேரியில் (30), தமிழ்நாடு (234), மேற்கு வங்கம் (294) என அனைத்து 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது குறித்த தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
ஏப். 29 ஆம் தேதி மேற்கு வங்கத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்புகள் எதுவும் வெளியிடக்கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இன்று மாலை மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் 6.30 மணி அளவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப் பதிவு நாளில், வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்படும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளைவிட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அதிகத்துல்லியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், அரியணையில் அமரப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவுவதால் எதிர்பார்ப்புகள் கடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம் என்பதையும் கணிக்க முடியும் என்பதால், பரபரந்த தமிழகத் தேர்தல் களமும் முடிவைக்காண எதிர்பார்ப்பு அதிரித்துள்ளது.
Exit Poll Results 202: With the polling about to be over, focus has now turned to exit poll projections, which will be released after 6:30 pm in line with Election Commission guidelines on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.