முகப்பு
இந்தியா

3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!

மூன்று மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 2 ஜூலை 2026, 2:29 pm IST
இந்தியத் தேர்தல் ஆணையம் - கோப்புப்படம்
பகிர்:

பிகார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 சட்டப்பேரவைகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

பிகாரின் பாங்கிபூர் எம்.எல்.ஏ.வாக இருந்த நிதின் நவீன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். ம.பி.யின் தடியா எம்.எல்.ஏ. ராஜேந்திர பாரதி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், குஜராத்தின் மஞ்சல்பூர் எம்.எல்.ஏ. யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் உடலநலக் குறைவால் உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

இந்த மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருகின்ற ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூலை 6 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு இல்லை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார்.

மேலும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமாா், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா, விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர், கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 6 பேரும் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை.

மேலும், தமிழ்நாட்டுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

By-election announcement for 3 states - None for Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments