6 சமத்துவபுரங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த 6 சமத்துவபுரங்கள்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 42 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 6 சமத்துவபுரங்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 6) திறந்து வைத்தார்.
நிறைவடைந்த புதிய திட்டங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப். 6) தொடக்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 42 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 6 சமத்துவபுரங்கள், நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டி முதல் கெடமலை வரை ரூ. 34 கோடியே 12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலை, ரூ. 212 கோடியே 86 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், பாலங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக்கூடங்கள், பொது விநியோகக் கடைகள், என மொத்தம் ரூ. 289 கோடியே 38 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
Advertisement
Advertisement
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் ரூ. 1,238.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், கடல் பல்லுயிர் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக சென்னை, கிண்டியில் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை - 2026 யை வெளியிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ. 348 கோடியே 59 லட்சம் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்கள், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ரூ. 2091 கோடி முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைத்துள்ள, அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலையை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Chief Minister Stalin inaugurated 6 Samathuvapuram
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.