மீனவர்கள் கைது: தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்துள்ளனர்.
காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களை நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், மீனவர்களின் விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைக்கவுள்ளனர்.
கடந்த மாதம் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மொத்தம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும், அவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்குகின்றனர்.
இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.