முகப்பு
தமிழ்நாடு

தமிழக ஆளுநரின் செயல் ஏற்கத்தக்கதல்ல: பெ. சண்முகம்

கிருஷ்ணகிரியில் செயல்படும் சுங்க வசூல் மையத்தை அகற்றக்கோரி முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பற்றி..

Updated On : 3 ஜூலை 2026, 12:42 pm IST
கிருஷ்ணகிரியில் முற்றுகை ஆர்ப்பாட்டம் - file photo
பகிர்:

கிருஷ்ணகிரியில் செயல்படும் சுங்க வசூல் மையத்தை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் முற்றுகை ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது,

தமிழக ஆளுநருக்கு ஏதாவது கருத்துக்கள் இருக்கிறது என்று சொன்னால், அது முதலமைச்சருடைய கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, தானாக, தன்னிச்சையாகச் செயல்படுவது என்பது அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்கியிருக்கக்கூடிய அதிகாரத்திற்கு எதிரானது. விரோதமானது. ஆளுநருடைய அந்த அணுகுமுறை என்பது ஏற்கத்தக்கதல்ல.

Advertisement

Advertisement

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நெரிசல் ஏற்படுவதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அப்போதே சொல்லியிருக்கிறோம் அதுதான் இப்போதும் எங்களுடைய நிலைப்பாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை, எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள், குதிரை பேரம் நடத்துவது போன்றவற்றில் யார் ஈடுபட்டாலும் அது தவறான ஒரு செயல். ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதுபோன்ற போக்குகள் தவறானது என்பதை ஏற்கெனவே நாங்கள் தெரிவித்திருந்தோம்.

குறிப்பாக, நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து மாற்றுக் கட்சியில் இணைந்தபோது எங்களுடைய எதிர்ப்பினை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். இப்போதும் அதைத்தான் சொல்ல விரும்புகிறேன். இதுபோன்ற ஜனநாயகத்திற்கு விரோதமாக, விலை பேசுவது, பேரம் பேசுவது போன்ற நடவடிக்கைகள் என்பது யாராக இருந்தாலும் தவறு.

கடந்த காலத்திலும் ஊழல் வழக்குகள் இருக்கக்கூடிய பல நபர்களை இந்த மாதிரி கட்சி மாறி மாறிச் சேர்த்துக் கொள்வது என்பது கடந்த காலத்திலும் இருந்திருக்கிறது, இப்போதும் தொடருகிறது. பிரச்சனை என்னவென்றால், அவர்கள் மீதான வழக்கு, நேர்மையாகவும், நியாயமான முறையில் நடத்தப்படுகிறதா, அவர்கள் மீது எழுப்பப்பட்ட, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிற வழக்குகள் முறையாக நடத்தப்பட வேண்டும்.

இவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்துவிட்டார் என்பதற்காக அவர் மீதான வழக்குகளை முறையாக நடத்தாமல் இருப்பதோ அல்லது அவரைக் காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபட்டால் அது மிக மிகத் தவறானது. அதுபோன்ற செயலில் தற்போதைய தமிழக அரசு ஈடுபடக்கூடாது என அவர் தெரிவித்தார்.

Regarding the protest involving the laying of siege to the toll collection center operating in Krishnagiri, demanding its removal...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments