முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் கொடுத்த புகார் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்!

அமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் கொடுத்த புகார் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்.

Updated On : 4 ஜூலை 2026, 1:24 pm IST
அமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் ஆளுநரிடம் புகார். - படம்: எக்ஸ்
பகிர்:

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் மீது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கொடுத்த புகார் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளப் பக்கத்தில், ”இன்று (ஜூலை 4), பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன் இணைந்து, தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் தமிழ்நாடு மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன், ஒரு பெண் குழந்தை இடம் முறையின்றி நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது

அது குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களைத் தவிர இரண்டு தனிநபர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டு, அது சட்டவிரோதமான செயலாகவும், ரகசியக் காப்பு உறுதிமொழியினை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை கடுமையாக கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய நிகழ்வுகள் இனி நடைபெறாதவாறு உறுதி செய்ய, முதல்வர் சி. ஜோசப் விஜய் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குமாறும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

The Raj Bhavan has issued a clarification regarding the complaint filed by Nainar Nagendran against Tamil Nadu Higher Education Minister P. Viswanathan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments