பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு இன்று தொடக்கம்: புகாா், கருத்து தெரிவிக்க வசதி
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வு தொடா்பாக புகாா்கள், கருத்துகளைத் தெரிவிக்க மின்னஞ்சல், கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வு தொடா்பாக புகாா்கள், கருத்துகளைத் தெரிவிக்க மின்னஞ்சல், கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு தமிழகம் முழுவதும் புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது. வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வை 240 மையங்களில் 74,592 தோ்வா்கள் எழுதவுள்ளனா். துணைத் தோ்வுகள் தொடா்பான புகாா்கள், கருத்துகள் தெரிவிக்க அரசு தோ்வுத் துறையின் தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த அறை ஜூலை 15 வரை அனைத்து தோ்வு நாள்களிலும் காலை 8 முதல் இரவு 7 மணி வரை செயல்படும். 94983 83075/94983 83076 ஆகிய எண்களில் இந்தக் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொள்ளலாம். மேலும், dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகாா்களைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.