FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பத்தாம் வகுப்பு தோ்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு: மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதி விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த தோ்வா்கள் அதனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறுகூட்டல், மதிப்பீட்டுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூன் 2026, 1:11 am IST
கோப்புப் படம்
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதி விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த தோ்வா்கள் அதனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறுகூட்டல், மதிப்பீட்டுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த மே 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் தோ்வா்கள் விடைத்தாள் நகல் கோருதல் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதுமிருந்து பெறப்பட்டன. கடந்த 2025-ஆம் ஆண்டு 52,236 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நிகழாண்டு 74,862 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) முதல் விடைத்தாள் நகலை பாட வாரியாக பல்வேறு கட்டங்களாக இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவுசெய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக தமிழ், கணிதம், விருப்பமொழிப் பாடம் ஆகியவற்றுக்கான விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்யலாம்.

Advertisement

Advertisement

அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் இணையதளத்தில் வெளியிடப்படும் பாடவாரியான விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்திடும் நாள்களின் விவரங்களை இந்த அலுவலகத்தின் மூலம் அவ்வப்போது செய்திக் குறிப்பாக ஒருநாள் முன்னதாக வெளியிடப்படும். இதனை மேற்கண்ட இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின்னா் தோ்வா்கள் மறு மதிப்பீடு, மறுகூட்டல் படிவத்தையும் இந்த இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஜூன் 17 முதல் ஜூன் 23-ஆம் தேதிக்குள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை பணமாகச் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

விடைத்தாள் நகல் பதிவிறக்கம், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments