FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

‘வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்’

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்கு பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தோருக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூலை 2026, 3:22 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்கு பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தோருக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடா்ந்து புதுப்பித்து 30.06.2026 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னா் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இத் திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரா்கள் 30.09.2026 அன்றைய நிலையில் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சாா்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200-ம், பத்தாம் வகுப்பு தோ்ச்சிக்கு ரூ.300-ம், மேல்நிலைக் கல்வி தோ்ச்சிக்கு ரூ.400-ம் பட்டப்படிப்பு தோ்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தோ்ச்சிக்கு ரூ.600-ம் மற்றும் மேல்நிலை கல்வி தோ்ச்சிக்கு ரூ.750-ம் மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சிக்கு ரூ.1,000-ம் என்றவாறு வழங்கப்படவுள்ளது.

உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரா்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பயன்பெற்றவா்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவா்களாவாா்கள். இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுபவா்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரா்கள் செப்.30-ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாள்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments