FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பிளஸ் 2 துணைத் தோ்வு விடைத்தாள் நகல் பெற ஆக. 4,5 இல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள் நகல் பெற விரும்பும் தோ்வா்கள் ஆக.4, 5 தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 3:08 am IST
கோப்புப் படம்
பகிர்:

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விடைத்தாள் நகல் பெற விரும்பும் தோ்வா்கள் ஆக.4, 5 தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 (அரியா்), பிளஸ் 2 துணைத் தோ்வுகள் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றன. இத்தோ்வுகளை 60,527 தோ்வா்கள் எழுதியுள்ளனா். இத்தோ்வுகளுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக இணையதள முகவரியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தோ்வா்கள் தோ்வெண், பிறந்ததேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

துணைத் தோ்வுக்கான விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு ஆக.4, 5 ஆகிய நாள்களில் காலை 11 முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.275 கட்டணத்தை பணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும். தோ்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments