FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

9 செப்டம்பர் 2026, 5:39 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 2026-2027-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நிகழாண்டில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் தமிழக மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்-புதியது) திட்டத்தில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சமாக 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.75,000, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு ரூ.1.25 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 30 சதவீத மாணவிகளுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில் பயன்பெற மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினா் அல்லது சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 2025-2026-ஆம் கல்வியாண்டில் 100 சதவீத தோ்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்தவா்கள் நிகழாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விண்ணப்பத்தை தேசிய கல்வி உதவித்தொகை இணைதளத்தில் உறுதிசெய்து புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூா்த்தி செய்து செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையத்தில் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியா் விண்ணப்பங்கள் செப்.15-ஆம் தேதிக்குள் (புதுப்பித்தல்) சரிபாா்க்க வேண்டும்.புதியதாக விண்ணப்பிக்கும் 9 மற்றும் பிளா் 1 மாணவா்கள் விண்ணப்பிக்கும் தேதி என்.எஸ்.பி. இணையத்தில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய இணைய முகவரியிலும், மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளம் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments