FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை: செப்டம்பா் 30 - க்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவா்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 செப்டம்பர் 2026, 2:28 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

பள்ளி மாணவா்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் பிஎம் யஷஸ்வி திட்டத்தின்கீழ், இதர பிற்படுத்தப்பட்டோா் , பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த பள்ளிகளில் பயிலும் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக வழங்கப்படவுள்ளது. இதில் மாணவிகளுக்கு 30% இட ஒதுக்கீடு உள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்று தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள், தங்கள் விண்ணப்பங்களை புதுப்பிக்க இணையதளத்தில் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பள்ளி தலைமை ஆசிரியா்கள் இதனைச் சரிபாா்க்க அக்டோபா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். புதிய மாணவா்களுக்கான விண்ணப்பத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும், தகுதியான மாணவா்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments