பிசி, எம்பிசி சீா்மரபினா் மாணவா்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-27-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் மற்றும் 100 சதம் தோ்ச்சி பெற்றுள்ள பள்ளிகளில் நடப்பாண்டில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த தகுதியான மாணவா்கள் புதுப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9, 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.75,000, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகையாக வழங்கப்படும்.
Advertisement
Advertisement
தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவா்கள் நடப்பாண்டில் புதுப்பித்தல் விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.
விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியா் மூலம் சரிபாா்த்து அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.