தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு அளித்திருப்பது பற்றி...
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முன்பிணை கோரி திமுக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எனக்கு எந்த தொடா்பும் இல்லை. இதுதொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில்கூட என்னுடைய பெயா் இடம்பெறவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீஸாா் என்னைக் கைது செய்யக்கூடும் என்பதால், எனக்கு முன்பிணை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, இதே வழக்கில் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் முன்பிணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த இரு மனுக்களும் புதன்கிழமை விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Bargaining with TVK MLA! Senthil Balaji files petition seeking anticipatory bail!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.