கேப்டன் கூல்! தோனிக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!
கிரிக்கெட் வீரர் தோனிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
”கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
களத்திலோ அல்லது களத்திற்கு வெளியிலோ, உங்கள் நிதானம், தலைமைத்துவம் மற்றும் என்றும் குறையாத ஈர்ப்புத்திறன் ஆகியவை லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன. உங்களை மீண்டும் களத்தில் காண எப்போதும் போல ஆவலுடன் காத்துள்ளோம்.
உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல ஆண்டுகள் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Captain Cool - M.K. Stalin extends birthday wishes to Dhoni
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.