இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அதிவேக அரைசதம் கடந்து அசத்தினார் இந்திய ஆல்-ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 23 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தநிலையில், ஆட்டத்தின் மூன்றாறவது நாளான சனிக்கிழமை(ஆக. 2) வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது இன்னிங்சில் 9-அவது விக்கெட் ஆக களமிறங்கி ருத்ர தாண்டவம் ஆடினார். இங்கிலாந்து பந்துவீச்சை பௌண்டரிக்கு அப்பால் பறக்கவிட்ட அவர் 39 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டி20 ஸ்டைலில் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்தார். அதில் 4 பௌண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும்.
இறுதியாக அவர் ஆட்டத்தின் 87-ஆவது ஓவரில் 53 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோஷ் டங்க் பந்துவீச்சில் க்ராலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், இங்கிலாந்தின் ஜோஷ் டங்க் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
கடைசி விக்கெட்டுக்கு பிரசித் கிருஷ்ணாவுக்கு இரண்டே இரண்டு பந்துகள் மட்டுமே விளையாட விட்டுக்கொடுத்த சுந்தர் தனி ஒருவனாக மொத்தம் 46 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கடைசி விக்கெட் பார்டன்ஷிப் ஆக 53 ரன்கள் சேர்ந்தது. அதன் முழு உழைப்பும் சுந்தருக்கே. பிரசித் கிருஷ்ணா ரன் எதுவும் எடுக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.