முகப்பு
கிரிக்கெட்

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 146 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 22 பிப்ரவரி 2026, 5:13 pm IST
- படம் | AP
பகிர்:

உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 146 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பல்லேகலே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையடியது.

Advertisement

Advertisement

பில் சால்ட் அரைசதம்; பந்துவீச்சில் அசத்திய இலங்கை!

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டினைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடவில்லை. நிதானமாக விளையாடி அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசிய பில் சால்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 40 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

ஜோஸ் பட்லர் 7 ரன்கள், ஜேக்கோப் பெத்தேல் 3 ரன்கள், டாம் பாண்டன் 6 ரன்கள், ஹாரி ப்ரூக் 14 ரன்கள், சாம் கரண் 11 ரன்கள், வில் ஜாக்ஸ் 21 ரன்கள், ஜேமி ஓவர்டான் 10* ரன்கள் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே மற்றும் தில்ஷன் மதுஷங்கா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். மஹீஷ் தீக்‌ஷனா இரண்டு விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

summary

England, playing first against Sri Lanka in the Super 8 round of the World Cup series, scored 146 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.