டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஏப்ரல் 28) அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஏப்ரல் 28) அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடத்தப்படவுள்ளது. போட்டிகள் வருகிற ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி ஜூலை 5 வரை நடைபெறுகின்றன. தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஏப்ரல் 28) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
15 பேர் கொண்ட அணியை நாட் ஷிவர் பிரண்ட் கேப்டனாக வழிநடத்துகிறார். ஆல்ரவுண்டர் சார்லி டீன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
நாட் ஷிவர் பிரண்ட் (கேப்டன்), லாரன் பெல், அலைஸ் கேப்சி, டில்லி கோர்ட்டீன் கோல்மேன், சார்லி டீன் (துணைக் கேப்டன்), சோஃபியா டுங்க்லி, சோஃபி எக்கல்ஸ்டோன், லாரன் ஃபைலர், டேனி கிப்சன், எமி ஜோன்ஸ், ஃப்ரேயா கெம்ப், ஹீதர் நைட், லின்ஸி ஸ்மித், இஸி வோங், டேனி வியாட் ஹாட்ஜ்.
The England Cricket Board today (April 28) announced the England squad for the ICC Women's T20 World Cup.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.