முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
பாகிஸ்தான், இலங்கை அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், இலங்கை அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. பாகிஸ்தானில் நடைபெறும் இந்த முத்தரப்பு தொடர் வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 1) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை ஹாரி ப்ரூக் கேப்டனாக வழிநடத்துகிறார்.
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
ஹாரி ப்ரூக் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், டாம் பாண்டன், ஜேம்ஸ் கோல்ஸ், ஜோர்டான் காக்ஸ், மேசன் கிரேன், ஹென்றி க்ரோகோம்ப், சாம் கரண், லியம் டாஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜோஷ் டங்.
The England Cricket Board has announced the England squad for the tri-nation ODI series against Pakistan and Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.