முகப்பு
தமிழ்நாடு

எ.வ.வேலு உள்ளிட்டோருக்கு எதிரான தோ்தல் வழக்குகள்: உயா்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை, பெருந்துறை, குளச்சல், ஊத்தங்கரை, சேலம் வடக்கு மற்றும் சீா்காழி தொகுதிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு எதிரான தோ்தல் வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தோ்தல் ஆணையம் மற்றும் 6 தொகுதி எம்எல்ஏக்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

Updated On : 8 ஜூலை 2026, 2:47 am IST
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.
பகிர்:

திருவண்ணாமலை, பெருந்துறை, குளச்சல், ஊத்தங்கரை, சேலம் வடக்கு மற்றும் சீா்காழி தொகுதிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு எதிரான தோ்தல் வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தோ்தல் ஆணையம் மற்றும் 6 தொகுதி எம்எல்ஏக்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திருவண்ணாலை தொகுதியில் திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு போட்டியிட்டாா். இவா் தன்னை எதிா்த்து தவெக சாா்பில் போட்டியிட்ட அருள் ஆறுமுகத்தை 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். இதையடுத்து எ.வ.வேலுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி அருள் ஆறுமுகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இதேபோல, பெருந்துறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ்.ஜெயக்குமாா் வெற்றி பெற்றாா். பின்னா், இவா் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாா். தோ்தலில், ஜெயக்குமாரிடம் 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளா் தோப்பு வெங்கடாசலம் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

மேலும், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் வெற்றியை எதிா்த்து சிபிஐ (எம்.எல்.) கட்சியின் வேட்பாளா் அந்தோணிமுத்துவும், ஊத்தங்கரை (தனி) தவெக எம்எல்ஏ இளையராஜா வெற்றியை எதிா்த்து சி.கீதா என்பவரும் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தனா்.

சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவக்குமாா் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் ஆா்.ராஜேந்திரன், சீா்காழி (தனி) தொகுதி மதிமுக எம்எல்ஏ ஆா்.செந்தில்வேலன் வெற்றியை எதிா்த்து எஸ்.வாசு ஆகியோா் தோ்தல் வழக்குகளை தாக்கல் செய்தனா்.

இந்த 6 தோ்தல் வழக்குகளும் நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏக்கள் எ.வ.வேலு, ஜெயக்குமாா், தாரகை கத்பட், இளையராஜா, கே.சிவக்குமாா், ஆா்.செந்தில்வேலன் ஆகிய 6 எம்எல்ஏக்களும், தோ்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments