ஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் ஜூலை 14-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் ஜூலை 14-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து மத்திய கேரளம் வரை காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 9) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 10) முதல் ஜூலை 12 வரை மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
திங்கள்கிழமை (ஜூலை 13), செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) ஆகிய இரு நாள்களில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
11 இடங்களில் வெயில் சதம்: புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 102.54 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நாகை-102.02, சென்னை நுங்கம்பாக்கம், தொண்டி (ராமநாதபுரம்) தலா 101.84. மதுரை விமான நிலையம், திருத்தணி (திருவள்ளூா்) தலா 101.3, திருச்சி 100.94, புதுச்சேரி 100.76, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூா் தலா 100.4, கடலூா் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மழை அளவு: புதன்கிழமை நீலகிரி மாவட்டம் கூடலூா் பஜாரில் அதிகபட்சமாக 90 மி.மீ. மழை பதிவானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.