எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை அமைப்போம்: அமைச்சர் ரமேஷ்
எதிர்காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை அமைப்போம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளது குறித்து...
எதிர்காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை அமைப்போம் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று (ஜூன் 1) தெரிவித்தார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு, வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜோசப் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது:
சின்ன பசங்க என்று ஏளமனாக பேசாதீர்கள். சின்ன பசங்க யார் என்று நிரூபிப்பார்கள் என்று முன்பு பிரசாரங்களில் கூறினேன். இப்போதும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். இந்த சின்ன பசங்க, எதிர்காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை அமைப்போம் என்று கூறிக்கொள்கிறேன் எனப் பேசினார்.